செய்திகள்
கோப்புபடம்

மருத்துவ உதவிக்கு போலீசை அழைக்கலாம்

Published On 2021-05-28 06:23 GMT   |   Update On 2021-05-28 06:23 GMT
மருத்துவ உதவி உள்ளிட்டவைகளுக்கு பொதுமக்கள் போலீசாரை அழைக்கலாம் என்று திருப்பூர் போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:

திருப்பூர் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் வயதானவர்கள், வெளியே செல்ல இயலாதவர்கள், மருத்துவ உதவி தேவைப்படுவோர், அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியவர்கள் திருப்பூர் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு 94981-81209, 0421-2243324, 2203313 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

உதவி தேவைபடுவோருக்கு அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் உதவி செய்வார்கள். அவ்வாறு செல்வோருக்கு வாகன தணிக்கை செய்யும் பகுதிகளில் முன்னுரிமை அளித்து அனுமதிக்கப்படுவர்.மேலும், அவசர உதவி தேவைப்படுவோர் போலீஸ் கட்டுப்பாட்டு அறையை அழைத்தால் அவரவர் பிரச்சினைகளுக்கு தகுந்தவாறு போலீசாரால் உதவி செய்யப்படும் .இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News