செய்திகள்
கோப்புபடம்

ஜி.எஸ்.டி.,யில் மாற்றம்-வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல்

Published On 2021-05-27 06:56 GMT   |   Update On 2021-05-27 06:56 GMT
ஜி.எஸ்.டி.யில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களை வர்த்தகர்கள் தெரிந்து வைத்து கொள்ள வேண்டுமென திருப்பூர் ஆடிட்டர் சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பூர்:

திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு சார்பில் ஜி.எஸ்.டி., குறித்த ஆன்லைன் கருத்தரங்கம் நடைபெற்றது. நிறைவு நாளன்று  ஆடிட்டர் சுப்பிரமணியன் பேசியதாவது:-

ஜி.எஸ்.டியில்  சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.அவற்றை தெரிந்து வைத்து கொள்வது மிகவும் அவசியம்.கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் அனைத்து வர்த்தகர்களும், தாங்கள் பயன்படுத்தும் அனைத்து ரசீதுகளிலும் பொருட்களின் எச்.எஸ்.என்.,கோடு கட்டாயம் குறிப்பிட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறு, சிறு வர்த்தகர்கள், மாதம்தோறும் வரி தொகையை செலுத்திவிட்டு மூன்று மாதத்துக்கு ஒருமுறை மட்டும் ரிட்டர்ன் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது என்றார்.
Tags:    

Similar News