செய்திகள்
திருத்துறைப்பூண்டியில், ஊரடங்கு மீறல்: 50 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் - 100 பேர் மீது வழக்கு

திருத்துறைப்பூண்டியில், ஊரடங்கு மீறல்: 50 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் - 100 பேர் மீது வழக்கு

Published On 2021-05-21 13:50 GMT   |   Update On 2021-05-21 13:50 GMT
திருத்துறைப்பூண்டியில், ஊரடங்கு விதிகளை மீறிய 50 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம், அண்ணா சிலை, வேதைசாலை, நாகை சாலை, ெரயில்வே கேட் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை சாவடிகளை அமைத்து தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். திருத்துறைப்பூண்டி ெரயில்வே கேட் அருகே துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவதாஸ், சிவகுகன், உள்ளிட்டோர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அப்போது வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வருபவர்களிடம் இ-பதிவு உள்ளதா? என விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றிய 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 25-க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர். திருத்துறைப்பூண்டி பகுதியில் இதுவரை ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News