செய்திகள்
தடுப்பு கொண்டு மூடப்பட்டுள்ள தெரு

அலங்காநல்லூரில் வேகமெடுக்கும் கொரோனா- 424 பேருக்கு தொற்று பாதிப்பு

Published On 2021-05-17 11:16 GMT   |   Update On 2021-05-17 11:16 GMT
கிராம குடியிருப்பு பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் சர்மிளா மோகன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து பிளீச்சிங் பவுடர் போட்டு வருகின்றனர்.
அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறித்து வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர்.

சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்று வரை மொத்தம் 424 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரிந்தது. குணமடைந்தவரின் எண்ணிக்கை 154 ஆக உள்ளது.

குறிப்பாக கோட்டைமேடு ஊராட்சி குமாரம் கிராமத்தில் மட்டும் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதனால் கிராம குடியிருப்பு பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் சர்மிளா மோகன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து பிளீச்சிங் பவுடர் போட்டு வருகின்றனர்.

மேலும் 3-க்கும் மேற்பட்ட தெருக்கள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு தொற்று பரவாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



Tags:    

Similar News