செய்திகள்
மின்சார ரெயில்

இன்று முதல் மின்சார ரெயில் சேவை 205 ஆக குறைப்பு

Published On 2021-05-17 02:02 GMT   |   Update On 2021-05-17 02:02 GMT
சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 24 ரெயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 66 ரெயில் சேவையும் என குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பொது போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் கூட்டம் குறைவாக இருக்கும் பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.மேலும், சென்னையில் மின்சார ரெயில் சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று குறையத் தொடங்கியபோது 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டன. அதன் பிறகு மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியதால், 450 மின்சார ரெயில் சேவையாக குறைக்கப்பட்டது.



பின்னர் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டபின்னர், 288 மின்சார ரெயில் சேவையாகவும், தற்போது, இன்று (17-ந் தேதி) முதல் ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், சாதாரண நாட்களில் (திங்கள் முதல் சனிக்கிழமை வரை) மின்சார ரெயில் சேவை 205 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று முதல் மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் 85 மின்சார ரெயில் சேவையும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 30 சேவையும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 24 ரெயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 66 ரெயில் சேவையும் என 205 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News