செய்திகள்
கோப்புபடம்

சித்த மருந்துகள் விற்பனை அதிகரிப்பு

Published On 2021-05-16 06:07 GMT   |   Update On 2021-05-16 06:07 GMT
கொரோனா பரவலால் திருப்பூரில் சித்த மருந்துகள் விற்பனை அதிகரித்துள்ளது.
திருப்பூர்:

கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில்  திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில்  மீண்டும் சித்த மருத்துவ  வார்டு செயல்படுகிறது. தீவிர தாக்கம் இல்லாத நோயாளிகள்  சித்த மருத்துவ  சிகிச்சை பெறுகின்றனர். தன்னார்வலர்கள்  மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், கபசுர குடிநீரை வினியோகித்து வருகின்றனர். பொதுமக்கள் பலர் தாங்களே கபசுரக்குடிநீரை வாங்கி பருகி வருகின்றனர்.இது குறித்து சித்தா மருத்துவர்கள் கூறியதாவது:-

திருப்பூரில் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், அமுக்கரா மாத்திரை, தாளிசாதி சூரணம் போன்ற சித்த மருத்துவ மருந்துகளை  பொதுமக்கள் அதிகளவில் வாங்குகின்றனர்.இவற்றை வாங்கும்போது விழிப்புணர்வுடனும், கவனமுடனும் இருக்க வேண்டும். மருந்து தயாரிக்கப்பட்ட நிறுவன பெயர், உரிமம் எண், மருந்து தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி, மருந்துகளில் கலந்துள்ள பொருட்களின் சதவீத அளவு போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதை பார்த்து வாங்க வேண்டும். காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளோர், மருத்துவர்களை அணுகி  அதற்கேற்ப மருந்துகளை அளவு சரியாகவும்  முறைப்படியும் உட்கொண்டால்  நோய் விரைவில் தீரும் என்றனர். 
Tags:    

Similar News