செய்திகள்
மாமரம்

மகசூல் இழப்பால் மாம்பழம் சாகுபடி விவசாயிகள் கவலை

Published On 2021-05-15 07:44 GMT   |   Update On 2021-05-15 07:45 GMT
மகசூல் இழப்பால் மாம்பழம் சாகுபடி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஜல்லிபட்டி, கொங்குரார்குட்டை  உள்ளிட்ட பகுதிகளில் மா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் கொண்டுள்ளனர். இங்கு மல்கோவா, பங்கனப்பள்ளி, அல்போன்சா, இமாம்பசந்த், நடுச்சாலை, நீலா உள்ளிட்ட ரக மாமரங்கள் சாகுபடி செய்யப் படுகிறது. இந்தநிலையில் மாறுபட்ட பருவநிலைகளால் மகசூல் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.  

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

மழை பெய்ய வேண்டிய நேரத்தில் பனியும், பனி பெய்ய வேண்டிய நேரத்தில் மழையும் பொழிகிறது. மாறுபட்ட பருவநிலை காணப்படுவதால்  சாகுபடி செய்வது என்பதை திட்டமிட முடியவில்லை, ஏனென்றால் பூக்கும் தருணத்தில் மழைப் பொழிவு ஏற்பட்டால் பூக்கள் உதிர்ந்து விடும்.

நடப்பு ஆண்டிலும் பருவம் தவறி பெய்த மழையால் பூக்கள் உதிர்ந்து மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.உடுமலை பகுதியில்ஆண்டுக்கு 2 முறை மா அறுவடை மேற்கொள்ளுமளவுக்கு காய்ப்பு இருக்கும்.  தற்போது ஒரு முறையாக குறைந் துள்ளது.

காட்டுப் பன்றிகள், யானைகள் போன்ற வன விலங்குகளாலும், பூச்சி தாக்குதலிலிருந்தும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.பாதுகாப்பு தொடர் பராமரிப்பு, கவாத்து பணிகளுக்கான செலவினங்கள் என ஆண்டு முழுவதும் செலவு செய்து விட்டு வருமானத்துக்காக காத்திருக்கும் நிலையில் இருக்கிறோம். 

காப்பீடு செய்த விவசாயிகளுக்குக் கூட இழப்பீடு கிடைக்கவில்லை. கொரோனா ஊரடங்கால் மாம்பழங்களை வெளி யூர்களுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அரசு மா விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News