செய்திகள்
ஆக்சிஜன் பொருத்தப்பட்ட பஸ்.

திருப்பூரில் ஆக்சிஜன் பஸ்

Published On 2021-05-15 07:12 GMT   |   Update On 2021-05-15 07:12 GMT
திருப்பூரில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் யங் இந்தியன்ஸ் , ரைடர்ஸ் கிளப் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பினர் இணைந்து கொரோனா நோயாளிகளுக்காக
ஆக்சிஜன் பேருந்தினை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறியதாவது:-

ஆக்சிஜன் தேவை என அரசு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு படுக்கை கிடைக்கும் வரை, இப்பேருந்தில் தங்க வைக்கப்படுவார்கள். ஒரே நேரத்தில் 6 பேருக்கு 10 லிட்டர் ஆக்சிஜன் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சிலிண்டர்கள் மூலம் அல்லாமல் கான்சென்டடேட்டர் முறையில் காற்றிலிருந்து சுத்தமான முறையில் ஆக்சிஜனை பிரித்து பயன்படுத்தப்படுவதால், 24 மணி நேரமும் இதனைப்பயன்படுத்த முடியும். முதல்கட்டமாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சோதனைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. பலரும் வரவேற்றுள்ளனர்.
Tags:    

Similar News