செய்திகள்
திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்ற வடமாநில தொழிலாளர்கள்.

வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம்

Published On 2021-05-15 04:54 GMT   |   Update On 2021-05-15 04:54 GMT
திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டதால் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
திருப்பூர்:

கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமாக உள்ளதால் 2 வார ஊரடங்கு அறிவிப்பை தமிழக அரசு அறிவித்தது. 

இதில் திருப்பூர்  பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த  நிலையில்  கொரோனா பாதிப்பு  காரணமாக பின்னலாடை நிறுவனங்கள் தாமாக முன்வந்து இன்று முதல் நிறுவனங்களை அடைத்து ஊரடங்கில் பங்கேற்றுள்ளனர்.பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டதால்  பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர். 

எர்ணாகுளத்தில் இருந்து திருப்பூர் வழியாக பீகார் மாநிலம் பாரவுனி  செல்லும் சிறப்பு விரைவு ரெயிலில் கொரோனா சமூக இடைவெளியை மறந்து முண்டியடித்தபடி வடமாநில தொழிலாளர்கள் ரெயிலில்   ஏறி பயணித்தனர். ரெயில் புறப்பட்ட நிலையிலும் பலர் தொடர்ந்து ஏறியபடி இருந்ததால் இளைஞர்கள் சிலர் ரெயிலின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணித்தனர். 

சொந்த ஊருக்கு  செல்லும் வடமாநில தொழிலாளர்களுக்கு   வசதியாக போதிய ரெயில்களை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News