செய்திகள்
திருப்பூரில் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்ட காட்சி.

திருப்பூரில் கொரோனா விதிகளை மீறிய பொதுமக்களுக்கு அபராதம்

Published On 2021-05-14 09:14 GMT   |   Update On 2021-05-14 15:10 GMT
திருப்பூரில் கொரோனா விதிகளை மீறிய பொதுமக்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
திருப்பூர்:

திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் செயல்பட  அனுமதிக்கப்பட்டு இருந்ததால் கடந்த சில நாட்களாக   சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம்  அதிகம் காணப்பட்டது.  இது  கொரோனா பரவலுக்கு வழிவகுத்து விடும் என்பதால்   இன்று முதல் பனியன் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் என்று உற்பத்தி யாளர்கள் சங்கம்  சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை முதல் பனியன் நிறுவனங்கள் மூடப்படுகின்றன. 

இதையடுத்து பெரும்பாலான தொழி லாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதனால் இன்று  சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் சற்று குறைந்து காணப்பட்டது.  ஆனாலும் பலர் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்கிறோம் என்று மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து உலா வந்த வண்ணம் உள்ளனர். அவர்களிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
அவர்கள் வாங்கி செல்லும் பொருட்கள், எத்தகைய காரணங்களுக்காக செல் கிறார்கள் என்பதற்காக அதற்கான ஆவணங்களை பார்வையிட்டு அனுப்பி வைக்கின்றனர்.   விதிகளை  மீறி  செல்பவர்களுக்கு  அபராதம் விதித்து வருகின்றனர்.
Tags:    

Similar News