செய்திகள்
கைது

திருப்பத்தூர் மாவட்டத்தில் வெளிமாநில மதுபாட்டில்கள் விற்ற 18 பேர் கைது

Published On 2021-05-13 14:37 GMT   |   Update On 2021-05-13 14:37 GMT
திருப்பத்தூர் மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெளிமாநில மதுபாட்டில்கள் விற்ற 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்:    

திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெளிமாநில மது பாட்டில்கள், சாராயம் விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் வந்தது. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 1,238 லிட்டர் வெளிமாநில மதுபாட்டில்கள், 800 லிட்டர் சாராய ஊறல், 225 லிட்டர் சாராயம், சாராய கடத்தலுக்கு பயன்படுத்தும் 4 சக்கர வாகனங்கள் 2, மோட்டார் சைக்கிள்கள் 3 பறிமுதல் செய்யப்பட்டன.

வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையையொட்டி மாதகடப்பாவை சேர்ந்த பாபு என்பவரும், மற்றொரு நபரும் மோட்டார் சைக்கிளில் லாரி டியூபில் அடைத்து சாராயம் கடத்தி வந்தனர். பாபு உள்பட மாவட்டம் முழுவதும் 18 பேர் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News