செய்திகள்
சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகம் நிவாரண நிதி வழங்கியது

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கிய சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகம்

Published On 2021-05-13 13:57 GMT   |   Update On 2021-05-13 13:57 GMT
கொரோனா அரக்கனை எதிர்கொள்ள தாராளமாக நிவாரண நிதி வழங்கலாம் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா 2-ம் அலையானது தற்பொழுது நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த 14 நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்து மேலும் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவையில் சிறப்பான பணியாற்றி வருகிறது.

இந்நிலையில் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன், பல்கலைகழகத்தின் தலைவர் மேரி ஜான்சன் மற்றும் பல்கலைகழகத்தின் துனை தலைவர் மரிய பெர்ணடெட் தமிழரசி  ஜான்சன் தமிழகத்தின் புதிய முதல்வர்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 50 லட்சத்தை வழங்கினர்.

தமிழக மக்களுக்காக நிவாரண நிதியை வழங்கிய சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழக நிர்வாகத்திற்க்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
Tags:    

Similar News