செய்திகள்
அபராதம்

விழுப்புரம் பகுதியில் ஊரடங்கு விதியை மீறிய 13 கடைகளுக்கு அபராதம்

Published On 2021-05-13 03:49 GMT   |   Update On 2021-05-13 03:49 GMT
விழுப்புரம் வட்டத்தில் உள்ள வளவனூர், காணை, கண்டமங்கலம், கெடார் உள்ளிட்ட பகுதிகளில் பொது முடக்க விதிகளை பின்பற்றி அத்தியாவசிய கடைகள் இயங்குகின்றனவா? என்று தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் வட்டத்தில் உள்ள வளவனூர், காணை, கண்டமங்கலம், கெடார் உள்ளிட்ட பகுதிகளில் பொது முடக்க விதிகளை பின்பற்றி அத்தியாவசிய கடைகள் இயங்குகின்றனவா? என்று தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது வளவனூர் பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரமான நண்பகல் 12 மணியை கடந்து செயல்பட்டதாக 2 மளிகைக் கடைகள், 4 இனிப்பகங்கள் என மொத்தம் 6 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

மேலும் கண்டமங்கலத்தில் நண்பகல் 12 மணிக்கு மேல் இயங்கிய மளிகைக் கடை, காணையில் 2 பலசரக்கு கடைகள் என மொத்தம் 7 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 13 கடைகளுக்கு மொத்தமாக ரூ.6,500 அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர்கள் சிவசக்தி, தங்கம், நர்மதா, இளவரசி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

Tags:    

Similar News