செய்திகள்
கைது

மேலூர் பகுதிகளில் 2000 மதுபாட்டில்கள் பறிமுதல்- 30 பேர் கைது

Published On 2021-05-11 09:38 GMT   |   Update On 2021-05-11 09:38 GMT
மேலூர் பகுதிகளில் 2000 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூர் உட்கோட்ட பகுதிகளான கொட்டாம்பட்டி, கீழவளவு, மேலவளவு உள் ளிட்ட பகுதிகளில் ஊரடங்கை பயன்படுத்தி சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மேலூர் டி.எஸ்.பி. ரகுபதி ராஜா தலைமையில் காவல் ஆய்வாளர்கள் சார்லஸ் மற்றும் செல்வராஜ் தனிப்பிரிவு ஏட்டு முத்துக்குமார்,ராஜா மற்றும் போலீசார் அப்பகுதிகளில் சென்று சோதனையிட்டனர்.

அப்போது கொட்டாம் பட்டி பகுதியில் மதுவிற்ற 4 பேர் கைது செய்து அவர்களிடம் 207 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

இதே போல் மேலவளவு கீழவளவு, மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்த 26 பேரை கைது செய்து அவர் களிடம் 1800 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 2000-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News