செய்திகள்
கொரோனா வைரஸ்

கோவை மாவட்டத்தில் 95 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

Published On 2021-05-10 08:55 GMT   |   Update On 2021-05-10 08:55 GMT
வீடுகளில் 3,876 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.அவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை:

கோவை மாவட்டத்தில் 2-வது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாராரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் வீடுகளில் 3,876 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.அவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக 2,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95, 099 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 56 வயது ஆண், 60 வயது முதியவர், 62, 60 வயது முதியவர்கள், 46 வயது ஆண் மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 64 வயது முதியவர் உள்பட 9 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 759 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றி சிகிச்சை பெற்று வந்த 1,705 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். தற்போது 11,731 பேர் கொரோனா பாதிப்புடன் கிசிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News