செய்திகள்
டாஸ்மாக் கடை

‘டாஸ்மாக்’ மது விற்பனை பாதியாக குறைந்தது

Published On 2021-05-07 03:13 GMT   |   Update On 2021-05-07 03:13 GMT
விற்பனை நேரம் வெகுவாக குறைந்ததின் காரணமாக, ‘டாஸ்மாக்’ மது விற்பனையும் பாதியாக குறைந்திருக்கிறது.
சென்னை:

தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 436 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. தினந்தோறும் சராசரியாக ரூ.120 முதல் ரூ.130 கோடி வரை ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இந்தநிலையில் தற்போது ஊரடங்கு நேர புதிய கட்டுப்பாடு காரணமாக மதுக்கடைகள் விற்பனை நேரம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி நேரம் வரை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று மதுக்கடைகள் 4 மணி நேரம் மட்டுமே செயல்பட்டன.

விற்பனை நேரம் வெகுவாக குறைந்ததின் காரணமாக, ‘டாஸ்மாக்’ மது விற்பனையும் பாதியாக குறைந்திருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று ரூ.72¾ கோடிக்கே மது விற்பனை நடந்திருக்கிறது.

Tags:    

Similar News