செய்திகள்
மதுபானம்

முழு ஊரடங்கை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.20 கோடிக்கு மது விற்பனை

Published On 2021-04-27 09:43 GMT   |   Update On 2021-04-27 09:43 GMT
கோவை மாவட்டத்தில் வடக்கில் 158 டாஸ்மாக் கடைகளும், தெற்கில் 135 கடைகளும் என மொத்தம் 293 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.
கோவை:

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை 30 மணி நேரம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இதன்காரணமாக கோவையில் கடந்த சனிக்கிழமை காய்கறி கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக கோவை நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்து இருந்து ஒவ்வொருவரும், 4 முதல் 5 மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.

கோவை மாவட்டத்தில் வடக்கில் 158 டாஸ்மாக் கடைகளும், தெற்கில் 135 கடைகளும் என மொத்தம் 293 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த கடைகளில் சனிக்கிழமை விற்பனையான மதுபாட்டில்கள் குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் உள்ள 293 கடைகளில் சராசரியாக ரூ. 7 கோடி வரை மதுபாட்டில்கள் விற்பனையாகும்.

நேற்று முன்தினம் முழு ஊரடங்கு என்பதால் முந்தைய நாள் (சனிக்கிழமை) கோவை வடக்கில் உள்ள 158 டாஸ்மாக் கடைகளில் ரூ.11 கோடியே 11 லட்சத்து 43 ஆயிரத்து 260-க்கும், தெற்கில் உள்ள 135 கடைகளில் ரூ.9 கோடியே 13 லட்சத்து, 65 ஆயிரத்து 210-க்கும் என மொத்தம் ரூ.20 கோடியே 25 லட்சத்து 8 ஆயிரத்து 470-க்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் 27,176 மதுபான பெட்டிகளும், 9,897 பீர் பாட்டில் பெட்டிகளும் விற்பனையாகி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News