செய்திகள்
கைது

ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் சிறையில் அடைப்பு

Published On 2021-04-27 09:18 GMT   |   Update On 2021-04-27 09:18 GMT
மண்டல துணை தாசில்தார் சுல்தான் சலாவுதீன் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள துவரக்குளத்தை சேர்ந்தவர் முருகலிங்கம் (வயது 22). சட்டக்கல்லூரி மாணவர்.

இவரது பாட்டி பூங்கனி (65). இவரது பூர்வீக சொத்து கொம்பன்குளம் ஊராட்சிக் குட்பட்ட துவரக்குளத்தில் உள்ளது. இதற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் முருகலிங்கம் விண்ணப்பித்தார்.

அப்போது மண்டல துணை தாசில்தார் சுல்தான் சலாவுதீன் பட்டா பெயர் மாற்றம் செய்ய முருகலிங்கத்திடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை முருகலிங்கத்திடம் வழங்கினர். அதனை அவர் மண்டல தாசில்தார் சுல்தான் சலாவுதீனிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர்.

தொடர்ந்து சலாவுதீனிடம் தாலுகா அலுவலகத்தில் வைத்து 2 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி, துருவி தீவிர சோதனை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.

அவரை இன்று கோர்டில் ஆஜர்படுத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News