செய்திகள்
கோப்பு படம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 389 பேர் பாதிப்பு

Published On 2021-04-18 16:17 GMT   |   Update On 2021-04-18 16:17 GMT
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 731 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 389 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 50 ஆயிரத்து 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 47 ஆயிரத்து 206 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 2 ஆயிரத்து 575 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 731 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர்.
Tags:    

Similar News