செய்திகள்
தேசிய மக்கள் நீதிமன்றம்

செஞ்சியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 100 வழக்குகளுக்கு தீர்வு

Published On 2021-04-12 02:10 GMT   |   Update On 2021-04-12 02:10 GMT
செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
செஞ்சி:

செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. செஞ்சி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், நீதிபதியுமான வெங்கடேசபெருமாள் தலைமையில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சுகந்தி, கூடுதல் நீதிபதி வர்ஷா, நடுவர் நீதிமன்ற நீதிபதி தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மோட்டார் வாகன விபத்துகள், சிவில் வழக்குகள், குடும்பநல வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி சாரா வழக்குகள் என விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதில் 44 விபத்து வழக்குகளும், 5 சிவில் வழக்குகளும், 51 குற்ற வழக்குகளுக்கும் சமரசமாக பேசி முடிக்கப்பட்டு, ரூ.1 கோடியே 79 லட்சத்துக்கு தீர்வு காணப்பட்டது. முகாமில் செஞ்சி பார் அசோசியேசன் தலைவர் சஞ்சீவி, செயலாளர் பழனி, அட்வகேட் அசோசியேஷன் தலைவர் சுதாகர் உள்பட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News