செய்திகள்
கோப்புபடம்

பணி நீட்டிப்பை ரத்து செய்யக்கோரி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-04-01 14:37 GMT   |   Update On 2021-04-01 14:37 GMT
பணி நீட்டிப்பை ரத்து செய்யக்கோரி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:

மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு தேர்ச்சி பெறுவோர் ஓராண்டு பயிற்சி டாக்டர்களாக பணிபுரிய வேண்டும். அதன்படி, அரசு மருத்துவக்கல்லூரிகளில் கடந்த 2015-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தவர்கள் கடந்த மாதத்துடன் தங்களது பயிற்சியை நிறைவு செய்தனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் பயிற்சி டாக்டர்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி நீட்டிப்பை கண்டித்தும், அதை ரத்து செய்யக் கோரியும் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், பயிற்சி டாக்டர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்காதே, பணி நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தி நின்றனர். மேலும் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதுகுறித்து பயிற்சி டாக்டர்கள் கூறும் போது, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம், என்றனர்.

Tags:    

Similar News