செய்திகள்
கொரோனா வைரஸ்

சென்னையில் தொடர்ந்து அதிகரிப்பு- கொரோனா தொற்று பாதிப்பில் அண்ணாநகர் முதலிடம்

Published On 2021-04-01 08:20 GMT   |   Update On 2021-04-01 08:20 GMT
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகியவை அதிக பாதிப்புள்ள மண்டலமாக இருந்தது.
சென்னை:

சென்னையில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 967 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகியவை அதிக பாதிப்புள்ள மண்டலமாக இருந்தது.

இந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்பில் அண்ணாநகர், முதலிடத்தில் உள்ளது. அங்கு 729 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தேனாம்பேட்டையில் 702 பேரும், கோடம்பாக்கத்தில் 621 பேரும், ராயபுரத்தில் 568 பேரும், அம்பத்தூரில் 563 பேர், திரு.வி.க.நகரில் 558 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 10 நாட்கள் வரை குறைவாக இருந்த கொரோனா இப்போது மின்னல் வேகத்தில் பரவுகிறது.

வளசரவாக்கத்தில் 428 பேர், அடையாறில் 470 பேர், ஆலந்தூரில் 348, தண்டையார்பேட்டை 295 பேர், மாதவரம் 256 பேர் என பாதிப்பு பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் வரை பாதிப்பு 2 சதவீதமாக இருந்தது. இப்போது 3 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்னையில் 6,255 பேர் தொற்று பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுவரையில் 4,243 பேர் உயிர் இழந்துள்ளனர். வயதானவர்களை விட இளம் வயதுள்ளவர்கள் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

20-29 வயதுள்ளவர்கள் 18.42 சதவீதமும், 30-39 வயதுள்ளவர்கள் 18.48 சதவீதமும், 50-59 வயதுள்ளவர்கள் 18.79 சதவீதமும் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.

சென்னையில் இதுவரையில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 965 பேர் பாதிக்கப்பட்டதில், 2 லட்சத்து 28 ஆயிரத்து 467 பேர் குணமடைந்துள்ளனர். தினமும் 15 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
Tags:    

Similar News