செய்திகள்
அருண்

திருச்சி போலீஸ் கமிஷனராக அருண் நியமனம்- தேர்தல் ஆணையம் உத்தரவு

Published On 2021-04-01 03:02 GMT   |   Update On 2021-04-01 03:02 GMT
திருச்சி போலீஸ் கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. ஜெயராம் இடமாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை:

திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் தபால் ஓட்டுப்போடும் போலீசாருக்கு பணப்பட்டுவாடா நடந்தது. இந்த விவகாரம் தொடர்பாக 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டார். மேலும் திருச்சி பொன்மலை போலீஸ் உதவி கமிஷனர் தமிழ்மாறன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ய இருப்பதாக நேற்று தகவல் பரவியது.

இந்த நிலையில் திருச்சி போலீஸ் கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டார். அதேபோல் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். சில உயர் போலீஸ் அதிகாரிகளை மாற்றி நேற்று தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதிகாரிகள் மாற்றம் பற்றிய விவரம் வருமாறு:-

* அருண்- திருச்சி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். திருச்சி போலீஸ் கமிஷனராக பணியாற்றிய லோகநாதன் ஏற்கனவே மாற்றப்பட்டார்.

* அமல்ராஜ்- மேற்கு மண்டல ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார். மேற்கு மண்டல ஐ.ஜி. தினகரன் அங்கிருந்து மாற்றப்பட்டார்.

* தீபக் எம் தாமோர்- மத்திய மண்டல ஐ.ஜி.யாக பதவி ஏற்பார். மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராம் மாற்றப்பட்டார்.

* செல்வநாகரத்தினம்- கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு சூப்பிரண்டாக பணியாற்றிய அருள்அரசு மாற்றப்பட்டார். மாற்றப்பட்டுள்ள ஜெயராம், தினகரன், அருள் அரசு ஆகியோருக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வேறு பணி கொடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News