செய்திகள்
திருட்டு

வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

Published On 2021-03-20 10:16 GMT   |   Update On 2021-03-20 10:16 GMT
வேப்பந்தட்டை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் காசி(வயது 45). விவசாயியான இவர் நேற்று காலை 11 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வயலுக்கு சென்றார். அவரது மகன் அருண்பாண்டியன் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்குச் சென்ற அருண்பாண்டியன் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரது தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து காசி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து காசி வி.களத்தூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அந்த நாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருடப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News