செய்திகள்
சிறப்பு ரெயில்

ராமேசுவரம்-புவனேசுவர் சிறப்பு ரெயில் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு

Published On 2021-03-17 03:10 GMT   |   Update On 2021-03-17 03:10 GMT
ராமேசுவரம்-புவனேசுவர் சிறப்பு ரெயில் சேவை ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை:

மதுரை கோட்டத்தில் ராமேசுவரத்தில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேசுவருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயில் வருகிற 31-ந் தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரெயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராமேசுவரத்தில இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரெயில் (வ.எண்.08495) வருகிற ஏப்ரல் மாதம் 4, 11, 18, 25-ந் தேதிகளிலும், மே மாதம் 2, 9, 16, 23, 30-ந் தேதிகளிலும், ஜூன் மாதம் 6, 13, 20, 27-ந் தேதிகளிலும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ராமேசுவரத்தில் இருந்து காலை 8.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6.10 மணிக்கு புவனேசுவர் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் புவனேசுவரத்தில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் புறப்படும் ரெயில் (வ.எண்.08496) வருகிற ஏப்ரல் மாதம் 2, 9, 16, 23, 30-ந் தேதிகளிலும், மே மாதம் 7, 14, 21, 28-ந் தேதிகளிலும், ஜூன் மாதம் 4, 11, 18, 25-ந் தேதிகளிலும் இயக்கப்படும். இந்த ரெயில் புவனேசுவரத்தில இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 மணிக்கு ராமேசுவரம் வந்து சேரும்.

இந்த ரெயில்கள் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், சென்னை எழும்பூர், கூடூர், விஜயவாடா, துவ்வாடா, விசாகப்பட்டினம், விஜயநகரம், பெர்ஹாம்பூர், குர்தா ரோடு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
Tags:    

Similar News