செய்திகள்
சத்குரு

கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்... தமிழக அரசுக்கு சத்குரு வலியுறுத்தல்

Published On 2021-02-27 10:54 GMT   |   Update On 2021-02-27 11:47 GMT
தமிழக கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.
கோவை:

தமிழக கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்படவேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் சமீப காலமாக வலியுறுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, சத்குரு இன்று வெளியிட்டுள்ள அடுத்தடுத்த டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது.

கிழக்கிந்திய கம்பெனி நம் நாட்டு செல்வத்தை திருடியதோடு, கோவில்களை கையகப்படுத்தியதால் நம் ஆன்மீகத்தையும் அடக்கி ஒடுக்கினர். 

அரசாங்கம் கோவில்களை நிர்வகிக்க வேண்டுமென்றால், அவர்கள் தாங்கள் செய்வது மக்களாட்சி அல்ல, இறையாட்சி என அறிவிக்க வேண்டும். #கோவில்அடிமைநிறுத்து #FreeTNTemples

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்த டுவிட்டர் பதிவுடன், விரிவான தகவல்கள் மற்றும் தனது கருத்துக்களுடன் கூடிய வீடியோவையும் சத்குரு வெளியிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Tags:    

Similar News