செய்திகள்
பிரதமர் மோடி

நெய்வேலியில் கட்டப்பட்டுள்ள 2 அனல் மின் நிலையங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு- பிரதமர் மோடி

Published On 2021-02-25 11:50 GMT   |   Update On 2021-02-25 12:13 GMT
நெய்வேலியில் 2 புதிய 500 மெ. வாட் அனல் மின்உற்பத்தி நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
கோவை:

கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழாவில், தமிழில் வணக்கம் கூறி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார்.

நெய்வேலியில் ரூ. 8,000 கோடியில் கட்டப்பட்டுள்ள 2 அனல் மின் நிலையங்களையும் தென் மாவட்டங்களில் 709 மெ. வாட் சூரிய மின்உற்பத்தி நிலையங்களையும் நாட்டிற்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார் .

பவானி சாகர் அணை விரிவாக்கத்தால் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிக பயன்பெறும். தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்களால் ஒட்டுமொத்த தமிழகமே பயன்பெறும். தொழில் நகரமான கோவைக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பவானி சாகர் அணையை விரிவுபடுத்தும் திட்டத்தால் ஏராளமான விவசாயிகள் பயன்பெறுவர். தொழில் வளர்ச்சியில் முக்கிய தேவையான தடையற்ற மின்சாரத்துக்கு புதிய திட்டங்கள், இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.
Tags:    

Similar News