செய்திகள்
போராட்டம்

சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் விடிய, விடிய போராட்டம்

Published On 2021-02-24 05:40 GMT   |   Update On 2021-02-24 05:40 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் நிர்வாகி ரத்தினம் தலைமையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குடியேறும் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் நாட்டாண்மை கட்டிடம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இன்று விடிய, விடிய நடந்தது. தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். அதிக அளவு ஊனமுற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
Tags:    

Similar News