செய்திகள்
சிலிண்டர் டெலிவரி

சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் கூடாது- எண்ணெய் நிறுவனங்களுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

Published On 2021-02-19 12:23 GMT   |   Update On 2021-02-19 12:23 GMT
சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
சென்னை:

சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேஸ் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை கோரி லோகரங்கன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தனர்.
Tags:    

Similar News