செய்திகள்
அம்மா மினி கிளினிக்கை மாவட்ட கலெக்டர் சாந்தா திறந்து வைத்து பார்வையிட்ட போது எடுத்த படம்.

வடுவூர், நீடாமங்கலம், குடவாசல் பகுதியில் அம்மா மினி கிளினிக் -கலெக்டர் சாந்தா திறந்து வைத்தார்

Published On 2021-02-18 11:16 GMT   |   Update On 2021-02-18 11:16 GMT
வடுவூர், நீடாமங்கலம், குடவாசல் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை கலெக்டர் சாந்தா திறந்து வைத்தார்.
வடுவூர்:

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள கருவாக்குறிச்சியில் முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை மாவட்ட கலெக்டர் சாந்தா திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் கீதா, மன்னார்குடி சப்-கலெக்டர் அழகர்சாமி, முன்னாள் பால் வழங்கும் கூட்டுறவு வங்கித்தலைவர் கோ.அரிகிருஷ்ணன், மாவட்ட அறங்காவல் நியமனக்குழு தலைவர் செந்தில்ராஜ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் எம்.ராஜேந்திரன், தவமணி இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் கலைசெல்வம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் நீடாமங்கலம் ஒன்றியம் களாச்சேரி ஊராட்சி மேலபூவனூர் கிராமத்தில் முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை மாவட்ட கலெக்டர் சாந்தா திறந்து வைத்தார். இதில் தாசில்தார் மணிமன்னன், ஒன்றியக்குழு உறுப்பினர்ஆதிஜனகர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

குடவாசல் ஒன்றியம் மணவாளநல்லூர் ஊராட்சியை சேர்ந்த எரவாஞ்சேரி மற்றும் மருதுவாஞ்சேரி ஆகிய இடங்களில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் திறப்புவிழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதார அலுவலர் கீதா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன், ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில், ஓகை தொடக்ககூட்டுறவு வங்கி தலைவர் சாமிநாதன், வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் பரக்கத் நிஷா வரவேற்றார்.

இதில் குடவாசல் தாசில்தார் ராஜன் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், சுப்பிரமணியன், ஊராட்சி தலைவர்கள் தேதியூர் வசந்தா பன்னீர்செல்வம், விஷ்ணுபுரம் எழிலரசி மோகன், மருதுவாஞ்சேரி செல்வராணி, ஒன்றியக்குழு உறுப்பினர் ரமாசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News