செய்திகள்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டை முற்றுகையிட வந்த வீர் மரபினர் நலச்சங்கத்தினர்.

துணை முதல்வர் ஓ.பி.எஸ். வீடு முன்பு அய்யாகண்ணு தலைமையில் சீர்மரபினர் முற்றுகை

Published On 2021-02-18 09:07 GMT   |   Update On 2021-02-18 09:07 GMT
பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு முன்பு அய்யாகண்ணு தலைமையில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இன்று 68 சமுதாய உட்பிரிவுகளை கொண்ட சீர்மரபினர் நலசங்கம் சார்பில் மத்திய அரசின் சார்பில் 1979ஆம் ஆண்டிற்கு முன்பு வழங்கிய டி.என்.டி. என சாதி சான்றிதழ் வழங்கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

தமிழக அரசு தற்போது வரை டி.என்.சி. என்ற சாதி சான்றிதழ் வழங்கி வருவதால் தமிழக அரசு இரட்டை சான்றிதழ் முறையை நிறுத்திவிட்டு ஒற்றைச் சான்றிதழ் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் பெரியகுளத்தில் உள்ள தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீட்டை முற்றுகையிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பெரியகுளம் டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடந்து அய்யாகண்ணு தங்களது கோரிக்கையை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தொலைபேசியில் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், கோரிக்கைகளுக்கு முறையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து அய்யாகண்ணு தலைமையில் முற்றுகையிட வந்த சீர்மரபினர் நலச்சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து துணை முதல்வரின் வீட்டிற்கு செல்லும் அனைத்து சாலைகளும் பேரிகார்டுகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News