செய்திகள்
இலவச கண் சிகிச்சை முகாம்

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

Published On 2021-02-17 22:39 GMT   |   Update On 2021-02-18 10:05 GMT
திருப்பூர்-பல்லடம் சாலை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
வீரபாண்டி:

திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் 18-ந் தேதி முதல் சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்று வருகிறது. திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கடந்த ஒரு மாத காலமாக ஓட்டுனர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு மற்றும் உடல் பரிசோதனை, பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி போன்ற பல்வேறு பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். திருப்பூர்-பல்லடம் சாலை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் வாகன ஓட்டிகளுக்கு தனியார் மருத்துவமனை உதவியுடன் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கட்ரமணி இலவச கண் சிகிச்சை முகாமை தொடங்கிவைத்தார். முகாமில் தூரப்பார்வை, கிட்டப்பார்வை மற்றும் கண்களை பாதுகாப்பது குறித்தும் அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் சித்ரா மற்றும் சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இலவச கண் சிகிச்சை முகாம், காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் கண் சிகிச்சை முகாம் மூலமாக பயனடைந்தனர். நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News