கோவையில் நேற்று 56 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை 54 ஆயிரத்து 77 ஆக உயர்ந்தது.
கோவையில் 56 பேருக்கு கொரோனா
பதிவு: ஜனவரி 26, 2021 23:49
கோப்புப்படம்
கோவை:
கோவையில் நேற்று 56 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை 54 ஆயிரத்து 77 ஆக உயர்ந்தது. மேலும் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 68 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 669 ஆக உயர்ந்தது.
கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 68 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதன் மூலம் கோவையில் இதுவரை 52 ஆயிரத்து 943 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது 465 பேர் சிகிச்சையில் உள்ளனர்.