செய்திகள்
விஜயகாந்த்

யானையை தீ வைத்து கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை- விஜயகாந்த் வலியுறுத்தல்

Published On 2021-01-24 03:14 GMT   |   Update On 2021-01-24 03:14 GMT
யானையை தீ வைத்து கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மசினகுடியில் தனியார் விடுதி அருகே, யானை மீது தீப்பற்றி எரியும் போர்வையை வீசி, அதன் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த செயல் கடும் கண்டனத்துக்கு உரியது. யானைகள் நமது நாட்டின் பொக்கிஷங்கள். வாயில்லா ஜீவனை வதைப்பது மன்னிக்கவே முடியாத குற்றம்.

ஏற்கனவே உரிய முறையில் பாதுகாக்க தவறியதால் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் காட்டை விட்டு வெளியே வரும் யானைகள் தண்டவாளங்களை கடக்கும் போது ரெயில்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன. ஊருக்குள் வருகிறது, வாகனங்களை தாக்குகிறது என்பது போன்ற காரணங்களை காட்டி எரியும் நெருப்பை யானையின் மீது வீசியது மிருகத்தனமான செயல்.

எனவே, இத்தகைய செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். மேலும், இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், வனவிலங்குகளை பாதுகாக்கவும் அரசு தேவையான சட்டங்களை இயற்றி, அதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News