செய்திகள்
கைது

இரணியல் அருகே பிரபல கொள்ளையன் கைது- 10¾ பவுன் நகை மீட்பு

Published On 2021-01-15 03:14 GMT   |   Update On 2021-01-15 03:14 GMT
இரணியல் பகுதியில் தொடர் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து 10¾ பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
திங்கள்சந்தை:

இரணியல் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திருட்டு, கோவில்களில் உண்டியல் உடைப்பும் போன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்து வந்தது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் 3 தனிப்படை அமைத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தனிப்படை போலீசார் நேற்று காலை தோட்டியோடு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது அவர் கன்னியாகுமரி அருகே முகிலன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த குமார் என்ற சுடலை பழம் (வயது 52) என்பதும், குமரி மாவட்டத்தின் பல பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

குறிப்பாக இரணியல் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 3 திருட்டு வழக்குகளிலும், குளச்சல் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 4 வழக்குகளிலும், வெள்ளிச்சந்தை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 2 வழக்குகளிலும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சுடலை பழத்தை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 10¾ பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
Tags:    

Similar News