செய்திகள்
கோவை அரசு ஆஸ்பத்திரியில் பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி நடந்தபோது எடுத்த படம்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பழைய கட்டிடங்கள் இடிப்பு

Published On 2021-01-09 10:48 GMT   |   Update On 2021-01-09 10:48 GMT
சூப்பர் ஸ்பெஷாலிட்டியாக தரம் உயர்த்துவதற்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் பழைய கட்டிடங்கள் நவீன பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டது.









கோவை:

கோவை அரசு ஆஸ்பத்திரியை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜைக்கா) நிதியுதவி அளிக்க முன் வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரியை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆக்குவதற்கு கட்டிடங்கள், மருத்துவ உபகரணங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்டவை அமைக்க ரூ.286 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் கட்டிடம் கட்டுவதற்கு மட்டும் ரூ.110.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பழைய அவசர சிகிச்சை பிரிவு இருந்த இடத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடம் அமைக்க திட்டமிடப்பட்டது. எனவே அங்கிருந்த பழைய கட்டிடங்கள் நவீன பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் இடித்து அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
Tags:    

Similar News