செய்திகள்
சென்னை ஐகோர்ட்

உருமாறிய கொரோனா தடுப்பு நடவடிக்கை -மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

Published On 2021-01-06 10:19 GMT   |   Update On 2021-01-06 10:19 GMT
உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா காரணமாக பிரிட்டன் மட்டுமல்லாமல் அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் சோதனைக்கு உள்ளாக்க கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து விமானங்களையும் கண்காணித்து வருவதாகவும், அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகும், இதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் இந்த உருமாறிய கொரோனா கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, வெளிநாட்டுப் பயணிகளைத் தனிமைப்படுத்துவது குறித்து நிபுணர் குழுவின் ஆலோசனைகளைப் பெற்று அதன் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஜனவரி 18-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
Tags:    

Similar News