செய்திகள்
கைது

கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர பஸ்சில் சென்னைக்கு கஞ்சா கடத்திய 2 பேர் கைது

Published On 2020-12-26 06:04 GMT   |   Update On 2020-12-26 06:04 GMT
கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர மாநில அரசு பஸ்சில் சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி:

திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது. இங்கு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில, இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆந்திர மாநில அரசு பஸ்சை அவர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த பஸ்சில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 2 பைகளை கண்டு அதை சோதனை செய்தனர்.

அதில் 12 பாக்கெட்டுகளில் மொத்தம் 24 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த பஸ்சில் பயணம் செய்த மதுரை மாவட்டம் பசும்பொன் பகுதியைச்சேர்ந்த பாண்டியன் (வயது 30), கேரள மாநிலத்தைச் சேர்ந்த அருண்மோன் (30) ஆகிய 2 வாலிபர்களை ஆரம்பாக்கம் போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News