செய்திகள்
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ஆலந்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

Published On 2020-11-29 01:48 GMT   |   Update On 2020-11-29 01:48 GMT
ஆலந்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில், கணக்கில் வராத ரூ.4¾ லட்சம் கைப்பற்றப்பட்டது.
ஆலந்தூர்:

ஆலந்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில், கணக்கில் வராத ரூ.4¾ லட்சம் கைப்பற்றப்பட்டது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலங்களில் புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே சென்னையை அடுத்த நங்கநல்லூரில் உள்ள ஆலந்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்வதற்கு பொதுமக்களிடம் அதிகாரிகள் பெரும் அளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு அதிரடியாக அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அலுவலகத்தில் இருந்த சார் பதிவாளர் ஜெயப்பிரகாஷிடம் 2 கவர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.77 ஆயிரத்தை பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் நொளம் பூரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று அங்கி சோதனை செய்தனர், அப்போது அங்கு இருந்த கணக்கில் இல்லாத ரூ.4 லட்சத்து 9 ஆயிரத்தை கைப்பற்றினர். இதையடுத்து, மொத்தம் ரூ.4 லட்சத்து 86 ஆயிரத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News