செய்திகள்
வரிச்சியூர் செல்வம்

10 பவுனில் தங்க முககவசம் அணிந்த வரிச்சியூர் செல்வம்

Published On 2020-11-23 19:25 GMT   |   Update On 2020-11-23 19:25 GMT
நடமாடும் நகைக்கடை என அழைக்கப்படும் வரிச்சியூர் செல்வம் 10 பவுனில் தங்கத்தால் செய்யப்பட்ட முகக்கவசத்தை அணிந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை:

மதுரை அருகே வரிச்சியூர் கிராமத்தை சேர்ந்தவர், செல்வம் (வயது 53). இவர் வரிச்சியூர் செல்வம் என்றே அழைக்கப்படுகிறார். ரவுடியாக வலம் வந்த இவர், எப்போதும் தன்னை வித்தியாசமாக அடையாளம் காட்டிக்கொள்வார். இதற்காக ஏராளமான நகைகளை அணிந்து வலம் வருவார். அவரை ‘நடமாடும் நகைக்கடை’ என்றே அழைப்பார்கள்.

இந்தநிலையில் தற்போது அவர், தங்கத்தால் செய்யப்பட்ட முகக்கவசத்தை அணிந்தபடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விசாரித்தபோது, “கொரோனா வைரஸ் பரவி வருவதால் அதில் இருந்து தற்காத்து கொள்வதற்காக தங்கத்தால் முககவசம் செய்து அணிந்திருக்கிறேன். 9½ பவுன் எடை கொண்ட இந்த முக கவசத்தை பிரத்தியேகமாக ஆர்டர் கொடுத்து தயாரித்து கொண்டேன். ஓய்வெடுக்கும் நேரம் தவிர்த்து அனைத்து இடங்களுக்கு செல்லும்போதும் இதனை அணிந்தபடி செல்கிறேன். மற்றவர்களிடம் இருந்து நாம் வித்தியாசமாக இருக்க வேண்டும், அதே சமயத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தங்கத்தில் முககவசம் செய்து அணிந்திருக்கிறேன்” என தனக்கு நெருக்கமானவர்களிடம் வரிச்சியூர் செல்வம் கூறி இருக்கிறாராம்.
Tags:    

Similar News