செய்திகள்
அமைச்சர் ஆர்பி உதயகுமார்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு உத்தரவு- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Published On 2020-11-23 03:56 GMT   |   Update On 2020-11-23 03:56 GMT
நிவர் புயலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
சென்னை:

தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இன்று காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 740 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதன் நகர்வை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்பகுதியை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கலாம் என்றும், அப்போது கடலோர மாவட்டங்களில் கடுமையான காற்றும், கடல் பகுதியில் சூறாவளி காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிவர் புயல் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நிவர் புயலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து ஏரிகள், நீர் நிலைகளை கள ஆய்வு மேற்கொண்டு கரை உடைப்புகள் இல்லாமல் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News