செய்திகள்
கைது

பதுக்கி வைத்து மது விற்ற 31 பேர் கைது - 281 பாட்டில்கள் பறிமுதல்

Published On 2020-11-16 17:38 GMT   |   Update On 2020-11-16 17:38 GMT
பதுக்கி வைத்து மது விற்ற 31 பேரை போலீசார் கைதுசெய்தனர். 281 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிவகாசி:

சிவகாசி உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தனர்.இதுகுறித்து கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மது பாட்டில்களை பதுக்கி வைப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அளவுக்கு அதிகமான மதுப் பிரியர்கள் கூடி மதுபாட்டில்களை அதிகஅளவில் வாங்கி சென்றாலும் சில கிராமங்களில் மதுக்கடை இல்லாததால் அங்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டது. நகர் பகுதிகளிலும் சில இடங்களில் மது பாட்டில்கள் சில்லறை அளவு முறையில் விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து தகவல் வந்ததன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரனின் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை செய்தனர்.

இதில் சிவகாசி கோட்டத்தில் அருணாச்சலம் மற்றும் குமார், பரமசிவம், கண்ணன், முனிராஜ் என்கின்ற புலிக்குட்டி, கிரிராஜன், ராமர், பிரபு, செல்வம், பஸ்வான், முனியாண்டி, செல்வகுமார், கருப்பசாமி முருகானந்தம், கர்ணன், இன்னொரு செல்வகுமார், பெருமாள்சாமி, பாண்டிராஜன், அசோகன், சந்திரசேகர், காளிஸ்வரன், முருகன், ராமச்சந்திரன், மாரிமுத்து, பரமசிவம், பெருமாள்ராஜ், வீராசாமி உள்பட 31 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 281 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகாசி பகுதியில் தொடர்ந்து மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு போலீசார் சிவகாசி பகுதியில் எவ்வித கண்காணிப்பு நடவடிக்கையும், சோதனையும் நடத்துவதில்லை. சிவகாசி போலீசார் தங்களுக்கு வரும் தகவலின் அடிப்படையிலேயே திடீர் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதை தடுக்க மதுவிலக்கு போலீசார் சிவகாசி பகுதியில் திடீர் சோதனை நடத்தி விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Tags:    

Similar News