ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து
பதிவு: நவம்பர் 14, 2020 10:38
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சென்னை:
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்கின்றனர். நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு தனித்தனியாக மலர்க்கொத்துகளுடன் தீபாவளி வாழ்த்துக் கடிதங்களை அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
Related Tags :