செய்திகள்
டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

திருவாரூரில் 30 சதவீத போனஸ் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-07 06:02 GMT   |   Update On 2020-11-07 06:02 GMT
திருவாரூரில் 30 சதவீத போனஸ் வழங்கக்கோரி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர்:

கொரோனா காலத்திலும் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு உடனடியாக 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும். டாஸ்மாக் கடை இயங்கும் நேரத்தை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையாக மாற்ற வேண்டும். பணியில் இருந்த போது உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் அமைப்பின் தொ.மு.ச. மாநில பிரசார செயலாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் லெனின், அரசு பணியாளர் சங்க மாநில பொருளாளர் அருள்மணி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் பி.டி.லெனின், தொ.மு.ச. மாவட்ட தலைவர் தமிழரசன், எல்.எல்.பி. மாவட்ட செயலாளர் சார்லஸ், சி.ஐ.டி.யூ. அமைப்பின் மாவட்ட செயலாளர் முருகையன், ஏ.ஐ.டி.யூ.சி. அமைப்பின் மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத், தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் தலைவர் குருநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Tags:    

Similar News