அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது.
அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் -நீதிமன்றத்தில் முறையீடு
பதிவு: நவம்பர் 05, 2020 11:50
உயர் நீதிமன்ற மதுரை கிளை
மதுரை:
தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கான சட்ட மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மருத்துவ கல்வி இயக்குனரகம் துவக்கி உள்ளது. விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது.
இந்நிலையில், அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது.
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் மாணவர்களையும் சேர்க்க உத்தரவிடக் கோரி நெல்லையைச் சேர்ந்த பிரீத்தி என்பவர் சார்பில் வழக்கறிஞர் இந்த முறையீட்டை முன்வைத்தார். ஆனால், இந்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணை நடத்தப்படும் என நிதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அறிவித்தனர்.
Related Tags :