செய்திகள்
வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு

Published On 2020-10-23 08:31 GMT   |   Update On 2020-10-23 09:54 GMT
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.28ந்தேதி முதல் தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் முடிந்ததும் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.

* தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.28ந்தேதி தொடங்கக்கூடும்.

* புதுச்சேரி, தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா, ராயலசீமா கடற்பகுதியிலும் 28ல் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம்.

* வடகிழக்கு பருவமழை வட தமிழகத்தில் இயல்பாகவும், தென் தமிழகத்தில் இயல்பைவிட குறைவாகவும் இருக்கும்.

* வட தமிழகம், தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News