செய்திகள்
பணம் பறிமுதல்

பாலக்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.42 ஆயிரம் பறிமுதல்

Published On 2020-10-23 06:56 GMT   |   Update On 2020-10-23 06:56 GMT
பாலக்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.42 ஆயிரத்து 280-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பத்திரப்பதிவு செய்ய அதிக அளவில் புரோக்கர்களின் மூலம் பணம் வசூலிப்பதாக தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து நேற்று மாலை 5½ மணி அளவில் தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜ் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் பாலக்கோடு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர்.

அவர்கள் அலுவலகத்தில் நுழைந்ததும் அலுவலர்கள் மற்றும் புரோக்கர்கள், எழுத்தர்கள் யாரும் வெளியே செல்ல முடியாத அளவில் கதவை பூட்டிவிட்டு திடீரென ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.42 ஆயிரத்து 280 இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதைதொடர்ந்து சார்பதிவாளர் சரவணன் மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் இரவு 11 மணி வரை விசாரணை நடத்தினர். சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News