செய்திகள்
கோப்புபடம்

தஞ்சை அருகே புகையிலை பொருட்கள் விற்ற 41 பேர் கைது

Published On 2020-10-20 11:14 GMT   |   Update On 2020-10-20 11:14 GMT
தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 41 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இந்தநிலையில் தஞ்சையை அடுத்த பூக்கொல்லை, தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை, பூமால் ராவுத்தர் கோவில் தெரு, ராஜப்பா நகர், ராமநாதன் ரவுண்டானா, பாலாஜி நகர் ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் போலீசார் நடத்திய சோதனையில் 9 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதேபோல் வல்லம் பகுதியில் 2 கடைகளிலும், பட்டுக்கோட்டை பகுதியில் 3 கடைகளிலும், ஒரத்தநாடு பகுதியில் 1 கடையிலும், திருவையாறு பகுதியில் 4 கடைகளிலும், தஞ்சை புறநகர் மற்றும் பாபநாசம் பகுதியில் 5 கடைகளிலும், கும்பகோணம் பகுதியில் 7 கடைகளிலும், திருவிடைமருதூர் பகுதியில் 10 கடைகளிலும் என மொத்தம் 41 கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக 41 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News