செய்திகள்
கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்

மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்

Published On 2020-10-19 07:06 GMT   |   Update On 2020-10-19 07:06 GMT
மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மொரப்பூர்:

மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவர் சுமதி செங்கண்ணன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலன், தனபால், போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேட்டு வரவேற்றார். இதில் அரூர் உதவி கலெக்டர் பிரதாப், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சீனிவாசசேகர், ஊராட்சி உதவி இயக்குனர் இன்பா ஆகியோர் கலந்துகொண்டனர். கொரோனா பரவலை தடுக்க வணிகர்கள் தங்களது கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவசியம் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காத வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வழங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. முகாமில் மொரப்பூர் அனைத்து வணிகர் சங்க தலைவர் முத்து, தொழில் அதிபர் மோகன்ராஜ், நிர்வாகிகள் தங்கராஜ், காந்தி, அழகிரி, ராமு ஊராட்சி மன்ற தலைவர்கள் உமாராணி உலகநாதன், சரிதா ராஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபிநாத் நன்றி கூறினார்.
Tags:    

Similar News