செய்திகள்
நெல்லை கலெக்டர் ஷில்பா

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை - கலெக்டர் ஷில்பா தகவல்

Published On 2020-10-11 10:19 GMT   |   Update On 2020-10-11 10:19 GMT
நெல்லை மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.
நெல்லை:

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.) மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் தொழிற்பயிற்சி மையங்களில் அரசு ஒதுக்கீட்டில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தற்போது 2-ம் கட்ட கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் தங்கள் அருகில் உள்ள கம்ப்யூட்டர் மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். இல்லையெனில் அம்பை, பேட்டை, ராதாபுரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஐ.டி.ஐ., மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஐ.டி.ஐ. உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிப்பதின் மூலம் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு ஐ.டி.ஐ.யிலும் சேரலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து ஐ.டி.ஐ. பற்றிய விவரங்களும், தொழில் பிரிவுகளும், தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை மேற்கண்ட இணையதளத்தில் உள்ள விளக்க கையேடு பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு ஐ.டி.ஐ.யில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் எந்தவித பாகுபாடுமின்றி மாதம் ரூ.500 வீதம் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் பயிற்சியின்போது மடிக்கணினி, இலவச சைக்கிள், 2 சீருடைகள், ஒரு ஜோடி செருப்பு, பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

மாணவர்கள் ஐ.டி.ஐ. வந்து செல்ல இலவச பஸ் பாஸ் மற்றும் சலுகை கட்டணத்தில் ரெயில் பாஸ் வழங்கப்படும். அரசு ஐ.டி.ஐ.யில் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில பணி, அரசு முன்னணி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது. இதை இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News